வயிற்றுவலியால் அவதிப்பட்ட டீக்கடைக்காரர் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மேக்கிழார்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீராசாமி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த வீராசாமி கடந்த 7 ஆம் தேதி டீக்கடையில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உயிருக்கு போராடிய வீராசாமியை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வீராசாமி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.