Categories
தேசிய செய்திகள்

வலியால் துடித்த பெண் குரங்கு…. நெஞ்சை நெகிழவைக்கும் இளைஞரின் செயல்….!!!

புதுச்சேரி அருகே ஒரு கிராமத்தில் பெண் குரங்கு ஒன்றுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் பார்த்துள்ளார். அதன்பிறகு சற்றும் தாமதிக்காமல் உடனே தனது தொலைபேசியை எடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு அந்த இளைஞர் குரங்கின் கை கால்களை கட்டி முதலுதவி அளித்தார். இதையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் குரங்கு இருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காயமடைந்த குரங்குக்கு இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு சிகிச்சை அளித்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சக மனிதர்களுக்கு உதவி செய்யவே தயங்கும் இந்த காலத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |