வயிற்று வலி தாங்க முடியாமல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கண்டமனூரை அடுத்துள்ள பொன்னம்மாள்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேதா கடந்த சில மாதங்களாக தீராத வாயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மாணவி வீட்டில் தனது அறையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது பெற்றோர் உடனடியாக நிவேதாவை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிவேதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கண்டமனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.