வயிற்று வலியால் அவதியடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வளையப்பட்டி பகுதியில் அசோகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் பவித்ரா பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிற்க்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பவித்ராவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.