Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த மூதாட்டி….. பேரனின் கொடூரமான செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

பணம் தொடர்பான பிரச்சனையில் பேரன் தனது பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2-வது தெருவில் விசாலாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைகள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மகளும், சதீஷ் என்ற பேரனும் இருக்கின்றனர் இந்நிலையில். அமுதாவுக்கு புதிய வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாலாட்சி 2 லட்ச ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். அதில் ஒரு லட்ச ரூபாய் பணத்தை அமுதா திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள 1 லட்ச ரூபாயை விசாலாட்சி அடிக்கடி தனது மகளிடம் கேட்டுள்ளார். இதனால் தாய் மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அமுதா தனது மகன் சதீஷுடன் கொருக்குப்பேட்டையில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்ற போது ஒரு லட்ச ரூபாய் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சதீஷ் வீட்டில் இருந்த சுத்தியலால் தனது பாட்டியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மேலும் பிளேடாலும் மூதாட்டியும் உடல் முழுவதும் கீறியுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தாக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு விசாலாட்சியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |