Categories
உலக செய்திகள்

வலியை மறந்து தேசிய கீதம் பாடிய சிறுமி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

சிறுமி பாடிய தேசிய கீதம் பாடல் இணையத்தில் வைரல் ஆகிறது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்த சிறுமிக்கு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் காலில் கட்டு போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய காயத்தை மறந்து சிறுமி தேசிய கீதம் பாடியுள்ளார். இந்நிலையில் சிறுமி பாடிய தேசிய கீத பாடலை உக்ரைன் நாட்டின் உள்விவகார அமைச்சரின் ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனுடன் உக்ரைன் நாட்டை உடைக்க முடியாது என்றும், சிறுமியின் தேசிய கீதம் பாடல் அதை உணர்த்துகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் சிறுமி தன்னுடைய காலில் ஏற்பட்ட காயத்தின் வலியை நினைத்து வருத்தப்படாமல் தேசிய கீதம் பாடல் பாடும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |