Categories
மாநில செய்திகள்

வலி நிவாரணி பேரில் போதை மாத்திரை விற்பனை…. 4 இளைஞர்கள் கைது…..!!!!

சென்னையை அடுத்த புது வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறை நடத்திய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும், தேடுதலும் செய்து வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை வாஉசி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தனிப் படையினர் அவர்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஐந்து வகையான வழி மற்றும் மயக்கம் மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து வலிநிவாரணி மாத்திரைகள் என ஆயிரம் மாத்திரைகள், ஊசி, 6 செல்போன், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் அனைவரும் முகப்பேரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |