அடுத்ததாக உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் வெற்றிகரமாக நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தற்போது தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக உருவாகும். மேலும் வலுப்பெற்று தமிழக கரையை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டிசம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.