Categories
அரசியல் மாநில செய்திகள்

வலுவாக திரள வேண்டும்…! பிஜேபியை எதிர்க்கனும்…. மோடியை வீழ்த்தணும்… திருமாவை பின்பற்றும் வைகோ …!!

பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரண்டால் தான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என என வைகோ கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் உடைய அரசியலில் மத்திய அரசின் ஊரக வஞ்சகமான போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குஜராத் மீனவர்களுக்கு…  ஒரு மீனவர்களுக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது.

இங்கே தமிழக மீனவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட பொழுதும் அதை கண்டிக்கவும் இல்லை, அதில் கண்டனம் தெரிவிக்கவும் இல்லை.பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரளவேண்டும் என்று என்னுடைய கருத்து. அப்பொழுதான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என தெரிவித்தார்.

காங்கிரஸ் இல்லாமல் மாற்று கொண்டுவர வேண்டும் என்பது மம்தா உடைய கருத்து, திருமாவளவன் சொன்னதுதான் என்னுடைய கருத்தும்.நீட் தேர்வு பிரச்சனையில் மத்திய அரசு தன்னுடைய போக்கை….  தன்னுடைய விடாப்பிடியாக இருக்கக்கூடிய அந்த விடாக்கண்டன் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டுப் பிரச்சினைகளுக்கு நீட் தேர்வுக்கு  விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என கூறினார்.

Categories

Tech |