Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய மீனால்…. ஒரே நாளில் கோடீஸ்வரர்…. ஏழை மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!!

மும்பை பால்கர் மாவட்டத்தில் வசிப்பவர் மீன்பிடி தொழிலாளியான  சந்திரகாந்த்.  இவர் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி முதல் முறையாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இருக்கிறார். அப்போது அவருடைய வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியுள்ளன. சுமார் 150 மீன்கள் அந்த வலையில் இருந்துள்ளன. கடலுக்கு சென்ற முதல் நாளே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்ததாக அங்கிருந்த மீனவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துள்ளனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலைக்கு போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்இவை தங்க இதய மீன்கள் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த கோல் மீன்கள் ஒரு சுவையான மீன் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பல நாடுகளில் இது விலைமதிப்பு மிக்கதாக உள்ளது. இந்த மீன்கள் அனைத்துமே மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனையடுத்து அந்த மீனவர் மீன்களுடன் கரை திரும்பிய நிலையில் அனைத்தும் ஏலத்திற்கு விடப்பட்ட போது சுமார் 1.33 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த மீன் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி புரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது.

Categories

Tech |