உயிருக்கு போராடி கொண்டிருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்ட நபரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கருகாவூர் கிராமத்தில் பழைய மீன்பிடி வலையை யாரோ வீசியுள்ளனர். அதில் சிக்கி ஒரு நல்ல பாம்பு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த பாம்பை பிடிப்பதற்கு பயப்பட்டனர். அப்போது புகைப்பட கலைஞரான பிரவீன் என்பவர் துணிச்சலாக வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார். அதன்பிறகு அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார். அவரது துணிச்சலான செயலை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.