Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வலையை விரித்ததில் வந்த வினை… மீனவர் கொடூர கொலை… போலீஸ் கைது..!!

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ சிறுவர்கள் உட்பட 6 பேர் படகில் வைத்து மீனவர் அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர் .

மாயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா வானகிரி மற்றும் புதுப்பேட்டை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளனர். அந்த வலையின் மேல் பூம்புகார் அருகே வானகிரி மீனவர்கள் மற்றொரு வலையை வீசியுள்ளனர். இதனால் புதுப்பேட்டை மீனவர்கள் வலை சேதமடையும் என எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த வானகிரி மீனவர்கள் புதுப்பேட்டை மீனவர்களின் படகு மீது தங்களது படகினை கொண்டு மோதி படகை சேதப்படுத்தினர். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அவர்கள் கட்டை, இரும்பு குழாய் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதில் புதுப்பேட்டை கிராமத்தினர் மூர்த்தி (45) என்பவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் மயங்கி படகிலேயே விழுந்தார். அதைக் கண்டதும் வானகிரி மீனவர்கள் அங்கிருந்து படகில் வேகமாக சென்றுவிட்டனர். படகினில் மயக்க நிலையில் கிடந்த மூர்த்தியை சக மீனவர்களும் கொண்டுவந்து கரைக்கு சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து காரைக்கால் அரசு மருத்துவனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வானகிரியை சேர்ந்த செல்லதுரை, சதீஷ், ராஜீவ்காந்தி, ஏழுமலை மற்றும் 13, 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என ஆறு பேரை கைது செய்தனர்.

Categories

Tech |