கடலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாய பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஹித் டோனி(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரோஹித் டோனி 18 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்த படகை பியஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் 18 நாட்டிக்கல் மைல் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது ரோஹித் டோனி கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரோகித் கடலில் விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் நேற்று மாலை சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.