Categories
தேசிய செய்திகள்

“வளர்ச்சிப் பணியில் தடை உருவாக்குபவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை”… உ.பி துணை முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!!!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் போன்றோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் பிரயாக்ராஜில் காரணமானவர் என கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலமாக இடிக்கப்பட்டுள்ளது.

மேலும் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்ற மோதலுக்கு ஜாவேத் அகமது தான் காரணம் என தெரிவித்து அவரை காவல்துறை கைது செய்து இருக்கின்ற நிலையில் அவரது வீடும் இடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது கல் வீசி தாக்கிய புகாருக்கு ஆளான மேலும் இருவரின் விடும் ஷகாரன் பூரில் இடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் கரிப்  கல்யாண் சம்மேளனத்தில் உரையாற்றிய உத்திரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் வளர்ச்சிப் பணிகளை தடைகளை உருவாக்குபவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை.

மேலும் பிரச்சினை செய்பவர்களுக்கு  எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் முதல்வர் யோகி ஆதித்யா சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகவும் கண்டிப்பானவர்.  மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றது. சமூக விரோதிகளின் எந்தவிதமான இடையூறும் அமைதியின்மை மற்றும் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

Categories

Tech |