1.57 லட்சம் கோடி முதலீட்டில் மராட்டிய மாநிலத்தில் அமைய இருந்த தொழிற்சாலை குஜராத்திற்கு சென்று விட்டதற்கு அந்த மாநிலத்தில் ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது. இந்த நிலையில் இது பற்றி மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியபோது, குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் இல்லை அதுவும் நமது சகோதர மாநிலம் தான் இவையெல்லாம் ஒரு ஆரோக்கியமான போட்டியாகும். இதில் நாம் குஜராத் கர்நாடகா என எல்லோரையும் தாண்டி முன்னேறி செல்ல வேண்டும். மேலும் வளர்ச்சி திட்டங்களை கெடுப்பதில் மட்டுமே எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கிறது. முந்தைய அரசு எதற்கெடுத்தாலும் கமிஷன் கேட்டதால் மட்டுமே முதலீடுகள் குஜராத்திற்கு சென்றது என கூறியுள்ளார்.
Categories