Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்…. அடிக்கல் நாட்டிய யூனியன் தலைவர்… வெளியான தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கலப்பைபட்டி கிராமத்தில் ரூபாய் 23 ½ லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளரான பாண்டிய ராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் இதில் கலப்பைபட்டி பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற யூனியன் தலைவர் ரமேஷ் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார். இதையடுத்து அவர் நாரைக்கிணறு கிராமத்தில் ரூபாய் 6 ½ லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டி பணியை  தொடங்கி வைத்தார். இவ்விழாவில் யூனியன் உதவி பொறியாளர் ரவி, யூனியன் பணி மேற்பார்வையாளர் சங்கர், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பலர்பங்கேற்றனர்.

Categories

Tech |