Categories
மாநில செய்திகள்

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம்…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் மற்றும் நோய்த் தொற்று இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி சேலம் – கே.என்.நேரு, தேனி – பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – எ.வ.வேலு நியமனம், தருமபுரி – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராமநாதபுரம் – தங்கம் தென்னரசு நியமனம், காஞ்சிபுரம் – தா.மோ. அன்பரசன், நெல்லை – ராஜ கண்ணப்பன், திருவாரூர் – சக்கரபாணி, கோவை – செந்தில் பாலாஜி நியமனம், கிருஷ்ணகிரி – காந்தி, பெரம்பலூர் – சிவசங்கர், தஞ்சை – அன்பில் மகேஷ், மயிலாடுதுறை, நாகை – மெய்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |