Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்.. இரத்தம் வடிய அலறிய பரிதாபம்..!!

கேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடகரை என்ற பகுதியில் இளைஞர்கள் இருவர் தங்கள் ஸ்கூட்டரின் பின் அவர்களது வளர்ப்பு நாயை கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதில் அந்த நாய் கீழே விழுந்துள்ளது. மேலும் அதனை இழுத்து சென்று கொண்டே சென்றதால் உடல் முழுக்க  காயமடைந்து நாயின் கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட அலறியுள்ளது.

இதனை அப்பகுதி மக்கள் பார்த்து அந்த நபரை வழிமறித்துள்ளனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்த நபர் தொடர்ந்து இழுத்துக்கொண்டே சென்றிருக்கிறார். இதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் கூடி அந்த நபரை வண்டியுடன் மடக்கினர். அதன்பிறகு எடக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும் காவல்துறையினர் வருவதற்குள் அந்த இளைஞர்கள் நாயுடன் தப்பிச் சென்றுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சேவியர் என்ற நபர் தான் இதனை செய்தது தெரியவந்தது. அதன் பிறகு அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தலைமறைவாகியிருந்தார்.

இதனிடையே விஷயமறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சேவியர் வீட்டிற்கு விரைந்து, பலத்த காயங்களுடன் இருந்த அந்த நாய்க்கு சிகிச்சை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான சேவியர் மற்றும் அவருடன் இருந்த நபரை காவல்துறையினர் தேடி வருவதோடு, இருவர் மீதும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |