வடகொரியாவில் வளர்ப்பு நாய்களை பலி கேட்டதால் நாட்டு மக்கள் கதறுகின்றனர்.
வடகொரியா நாட்டில் உள்ள உணவு பற்றாக்குறை பற்றிய ஐநா சபை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் 25.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வட கொரியாவின் 60 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. சீனா அருகிலுள்ள வடகொரியா பகுதிகளில் கடந்த அஞ்சு மாசமா உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் வட கொரியா போன்ற நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த கூடிய பொருளாதார தடைகளை நீக்குவதற்காக ஐ நாசபை அமைப்பினுடைய மனித உரிமை வல்லுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடகொரியா அணு ஆயுத தயாரிப்பு நாடு என்பதால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 1990களின் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது 3 மில்லியன் மக்கள் உயிர் இழந்துள்ளனர் என தகவல் வெளியாகி இருந்தது.
கொரோனா தொற்று காரணமாக சீனாவுடனான வர்த்தகம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களிலிருந்தே வடகொரியாவுக்கு 90% தடைபட்டிருந்தது. இதனையொட்டி பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.மருந்துகளின் விலையும் அதிகரித்து வருகிறது. பலரும் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே உணவாக சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பட்டினி கிடக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.இதனால் மக்கள் ரொம்ப கோவமடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த உணவு பற்றாக்குறையை சமாளிக்க அந்த நாட்டினுடைய அதிபர் கிம் ஜாங் எடுத்த ஒரு முடிவு எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வடகொரியா நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க படக்கூடிய நாய்களை இறைச்சி தொழிற்சாலைகளில் கொடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள் வலுக்கட்டாயமாக வாங்கி செல்லப்படுகிறது. அதிபரின் இந்த முடிவுக்கு மக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.