மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக செயல்பட்டு வந்ததால், தன் சொத்தில் ஒரு பங்கை மனைவி பெயரிலும், மீதி பங்கை வளர்ப்பு நாய் ஆன ஜாக்கி பெயரிலும் எழுதி வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனக்குப் பின் அந்த வளர்ப்பு நாயை கவனித்துக் கொள்பவர்கள் அந்த சொத்தை அனுபவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.