Categories
தேசிய செய்திகள்

வளர்ப்பு மகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்…. உண்மையை மறைத்த பெற்ற தாய்…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சேர்ந்தவர் அமுதா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அமுதாவின் மகள் வீட்டில் தனியாக இருந்தபோது தனது வளர்ப்பு மகள் என்று கூட பார்க்காமல் அவரின் கணவர் அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் தாயையும்  கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அவரின் மிரட்டலுக்கு பயந்துபோன அந்த சிறுமியை அந்த நபர் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அச்சிறுமி  ஒரு கட்டத்தில் கர்பமடைந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் தயார் அவரிடம் சரிவர விசாரிக்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அச்சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் அச்சிறுமி ஏதோ உண்மையை மறைப்பது அறிந்து கொண்ட காவல்துறையினர் அச்சிறுமியின் ரத்த மாதிரி மற்றும் கரு செல்கள் ஆகியவற்றை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த பரிசோதனை முடிவில் குற்றவாளி யார்? என்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது தாயின் இரண்டாவது கணவர் தான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும்  தனது தாய் அவரின் தயவில் வாழ்வதால் தான் இந்த உண்மையை மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் அமுதாவிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்பு உண்மையை தெரிந்துகொண்டதாகவும், தன் வாழ்கை பறிபோய்விடும் என்ற பயத்தில் இந்த உண்மையை காவல்துறையினரிடம் சொல்லாமல் மறைத்து நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குற்றம் செய்த நபரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது. அதன்பின்னர் நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கி  தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |