குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில் வைத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்யும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத்தலைவர் கலைவாணி, செயல் அலுவலர் ராஜதுரை, வட்டார மருத்துவ அலுவலர் அபினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் தமிழக அரசு தலைவர் செழியன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மங்கல பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.