3ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரையிலான 741 தமிழ் எழுத்துகளால் திருவள்ளூவர் ஓவியத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற ஓவியர், கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்களை கொண்டு திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவின் கீழாக கணேஷ் பதிவிட்டிருந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலின், ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ எனப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.