Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வழக்கறிஞர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

வழக்கறிஞரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்வகுமார் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், சூர்யா, சந்தோஷ் குமார் ஆகியோர் செல்வகுமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சூர்யா, சந்தோஷ் குமார், சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |