Categories
மாநில செய்திகள்

“வழக்குகள் வாபஸ்”… அரசின் விளக்கம் திருப்தி…!உயர்நிதிமன்றம் உத்தரவு…!!

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 18 குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் 2012 முதல் 21 பிப்ரவரி மாதம் வரை தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட 133 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல்வர் ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியின் போது தொடர்ந்து 18 குற்றவியல் வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக வெளியிட்டிருந்த அரசாணையில் விளக்கத்தை ஏற்று ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கு உரிய காரணங்கள் அரசு விளக்கி  உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.  எம்.பி, எம்.எல்.ஏ களுக்கு எதிரான வழக்கு விசாரணை கண்காணிப்பது குறித்த வழக்கில் அரசு தரப்பு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |