Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழக்குபதிவு செய்ய முயன்ற போது…. சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் போலீஸ் குடியிருப்பில் தங்கராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கராஜ் இரவு நேரத்தில் 100 அடி சாலை, திருமங்கலம் 2-வது அவன்யூ சந்திப்பில் பணியில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்ற வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த தங்கராஜ் அந்த வாலிபரை தூக்கிவிட்டு விசாரித்த போது அவர் மது குடித்திருந்தது தெரியவந்தது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்ய முயன்ற போது வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனையடுத்து பத்து நிமிடம் கழித்து வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தங்கராஜின் கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தங்கராஜ் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அரும்பாக்கம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் லோகேஸ்வர்மன் என்பது தெரியவந்தது. இவர் மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த லோகேஷ்வர்மனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |