எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க கைவிட்டுவிட்டதால் அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில், வழக்கை விசாரிக்கும் டெலாவேர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும். தற்போது உலகளவில் பரபரப்பான வதந்திகள் வெளியாகி வருகின்றன. உலகின் முன்னனி பணக்காரர்களில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிவிட்டரில் உள்ள போலி கணக்குகள் பற்றிய விபரங்களை அந்நிறுவனம் தர மறுத்ததால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த வாரம் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஒப்பந்தத்தை மீறிய எலான் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம், அமெரிக்காவில் உள்ள டெலாவேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
பொதுவாக கேத்தலீன் மெக்கார்மிக் என்பவர் தான் கார்ப்போரேட் வர்த்தக நிறுவனங்களின் வழக்குகளை விசாரிப்பார். அதை போல் இந்த வழக்கையும் கேத்தலீனால் விசாரிக்க உள்ளார். மேலும் இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 4 நாட்களாக நடத்தும்படி நீதிபதி கேத்தலீனுக்கு டிவிட்டர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மிக குறுகிய கால அவகாசம் உள்ள இது போன்ற சிக்கல் நிறைந்த வழக்கில் கேத்தலீன் என்ன முடிவு எடுப்பார் என்பது உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்? இதை பற்றிய சிந்தனைகள் பல்வேறு மட்டத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. டிவிட்டர் நிறுவனம் – எலான் மஸ்க் மோதல் வழக்கில் கேத்தலீன் அளிக்கும் தீர்ப்புக்குப் பிறகு, இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கூறப்படுகின்றது.
இதற்கிடையில் டிவிட்டர் நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று தாக்கல் செய்த 241 பக்க மனுவில் எலாக் மஸ்க் ஒப்பந்த விதிகளை தொடர்ந்து மீறியுள்ளார் . அவர் தலைமை நிர்வாகியாக இருக்கும் டெஸ்லாவில் மின்சார வாகன தயாரிக்கும் பிரிவின் பங்குகளில் ஏற்பட்ட சரிவால் நஷ்டம் அடைந்துள்ளார். இதன் காரணமாக டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதே சமயத்தில் போலி கணக்குகள் பற்றிய முழுமையான தகவல் விவரங்களை அளிக்காமல் டிவிட்டர் நிறுவனம் ஒப்பந்த விதி மீறலில் ஈடுபட்டுள்ளது என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் டெஸ்லா நிறுவனத்திடமிருந்து ரூ.4.45 லட்சம் கோடி இழப்பீடு கோரி எலான் மஸ்க் மீது அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் தொடர்ந்துள்ள வழக்கையும் நீதிபதி கேத்தலீன் தான் விசாரித்து வருகின்றார். இந்த விசாரணை அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “டிவிட்டர் நிறுவனம் மற்றும் எலான் மஸ்க்கின் ஒப்பந்தத்தினால் நேரம், ஆற்றல் மற்றும் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இது செய்திகளை பகிர்வதற்கு டிவிட்டர் இன்றியமையாதது. இதனை பட்டியலிடப்பட்ட சமூக வலைதளம் லாபத்திற்காக நடத்த முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.