கொரோனா உயிர்க்கொல்லி நோய் கிடையாது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கு தொடர்ந்த நபருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தொகையை 15 நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர்களின் செயல்பாடுகள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, அபராதத்தை மனுதாரர் செலுத்த தவறினால் அவரிடம் இருந்து பணத்தை வசூலிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.