Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வழித்தடத்தை மீட்டு தாங்க…. போராட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற இருவர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வழித்தடத்தை மீட்டுத்தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் கூட்ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் ஒரு விவசாயிக்கு சொந்தமான நிலத்தை சுடுகாட்டுக்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயி அந்த பாதையை அடைத்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிடம் கேட்ட போது, அவர் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் வழித்தடத்தை மீட்டுத்தரக் கோரி கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சத்யா மற்றும் சம்பத் ஆகிய 2 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |