வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டில் ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத்தலத்தில் கடந்த 26ம் தேதி அன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் இறந்து விட்டதாக ஈரான் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் கைது நடவடிக்கையின் போது காயம் அடைந்த அந்த பயங்கரவாதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.