Categories
தேசிய செய்திகள்

“வழிபாட்டுத் தலங்களை அவமதித்தால் உடனே தூக்கு தான்”…. காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு….!!!!

பஞ்சாப்பில் கடந்த 2 நாட்களில் பொற்கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஒருவரும், கபுர்த்தலாவில் சீக்கிய கொடியை அவமதித்ததாக ஒருவரும், அடித்தே கொலை செய்யப்பட்டனர். வழிபாட்டுத்தலங்கள் அவமதிக்கப்பட்டதை பஞ்சாப் முதல்வர் உள்பட முக்கியமான தலைவர்கள் கண்டித்த போதிலும், இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அனைவரும் அமைதியாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மலேர்கொட்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை பொது வெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |