Categories
தேசிய செய்திகள்

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுமா?… மோதிக்கொள்ளும்… மராட்டிய கவர்னர், முதல்-மந்திரி…!!!

மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கவர்னர் பகத்சிங், முதல் மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “இந்து மதத்தின் தீவிர பக்தராக இருந்த நீங்கள் தற்போது வரை வழிபாட்டுத் தலங்கள் அனைத்தையும் திறக்காமல் இருப்பதற்கு தெய்வவாக்கு எதையாவது பெற்றுள்ளீர்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது உங்களால் வெறுக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கு மாறி விட்டீர்களா?.

வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரி எனக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன”என்று அவர் கூறியுள்ளார். அவரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவர்னருக்கு முதல்-மந்திரி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “திடீரென முழு ஊரடங்கு அமல் படுத்தியது சரி இல்லை. அதனைப் போலவே ஊரடங்கு முழுமையாக ஒரே சமயத்தில் தளர்த்துவது சரிவராது. ஆம்.. நான் இந்துத்துவத்தை பின்பற்றும் ஒருவன்தான். நான் இந்துவாக இருக்க நீங்கள் சான்றிதழ் அளிக்க தேவையில்லை. நீங்கள் கவர்னராக பதவி வகிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய மற்றும் மதச் சார்பின்மை இல்லையா?”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |