காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை இடிக்கவும், விசாரணை நடத்தி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வழிபாட்டு தளம் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், வழிபாட்டுத்தலம் கட்ட ஆட்சேபம் எதுவும் இல்லாததால் அங்கு கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்து அனுமதிக்கலாமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலத்தை இடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.