வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
சிம்பு நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நீண்டுகொண்டு உள்ளது என விமர்சனங்கள் எழுந்த நிலையில் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் இளைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் டிஆரின் காதலியாக சித்தி இதானி நடிக்கிறார். ராதிகா சரத்குமார் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.