ஓடைக்குள் நிலை தடுமாறி கார் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி தனது காரில் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். இவர் எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக தனது காரை சாலையின் ஓரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி ஓடைக்குள் விழுந்தது.
இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதன்பிறகு கார் கிரேன் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் பரளியாறு பகுதியில் இருக்கும் பாலம் முதல் திருவட்டார் கிராமம் வரை இருக்கும் சாலை பள்ளமாக இருக்கிறது. எனவே இந்த பகுதியில் இருக்கும் சாலையின் இரு பக்கங்களிலும் தடுப்பு சுவர் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.