Categories
தேசிய செய்திகள்

வழுக்கை இருப்பதை சொல்லல….. கணவர் மீது மனைவி புகார்….. சரணடைய அறிவுறுத்திய நீதிமன்றம்…!!

வழுக்கையை மறைத்து திருமணம் செய்ததாக பெண் கணவர் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கடந்த மாதம் “எனது கணவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கு வழுக்கை இருப்பதை விக்  வைத்து மறைத்து என்னை திருமணம் செய்துள்ளார். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவருக்கு வழுக்கை  இருப்பது திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவந்தது. அதுமட்டுமன்றி இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக்கொள்ள கூறி என்னை துன்புறுத்துகிறார். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே அந்தப் பெண்ணின் கணவர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தனது மனைவியின் தாயிடம் தனக்கு வழுக்கை இருப்பதாக ஏற்கனவே கூறி விட்டதாகவும், அதற்கு அவர் இதெல்லாம் பிரச்சினை இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் மீது 377  406  498 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து பெண்ணின் கணவரை காவல் நிலையத்தில் சரணடையுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் அவர் வெகு விரைவாக கைது செய்யப்படுவார் என்று மூத்த காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |