Categories
மாநில செய்திகள்

வாகனஓட்டிகளுக்கு ஆப்பு…. Helmet அணியாதவர்களிடம்…. ரூ.1000 அபராதம் வசூல்…!!

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1000 அபராதம் வசூலிக்கபடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சாலை விபத்து ஏற்படும்போது தலையில் அடிபட்டு உயிர் பலி ஏற்படுவதை தடுப்பதற்காக ஹெல்மெட் கட்டாயம் வாகன ஓட்டிகள் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தலைக்கவசம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வாறு கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவுறுத்தல் படி தலைக்கவசம் அணியாதவர்கள் ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. தலைக்கவச விழிப்புணர்வு குறித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் செலுத்தினால் தான் வாகனங்கள் விடுவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |