Categories
தேசிய செய்திகள்

வாகனஓட்டிகள் கவனத்திற்கு…. ஏப்-1 முதல் பார்க்கிங் கட்டணம்…. வெளியான அறிவிப்பு….!!!!

புதுச்சேரி நகராட்சி தனது வருவாயை பெருக்கும் நோக்கில்  பல்வேறு வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், வீட்டுவரி, காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வணிக உரிமம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை வசூலிப்பதில் தீவிரமாக  ஈடுபட்டு வருகிறது. மேலும் கூடுதலாக வருவாயை பெருக்க புதிதாக வரி விதிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வருகிற  ஏப்ரல்1 ந் தேதி முதல் புதுச்சேரி நகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கபடுவதாக, புதுச்சேரி நகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிளுக்கு ரூ.10-ம்,  கார்களுக்கு ரூ.30-ம்  மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ.40 என்ற நிலையில் நாளொன்றுக்கு வசூலிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, இதைப் போல் கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியான நிலையில் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |