Categories
தேசிய செய்திகள்

“வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!!!!!

2011 ஆம் வருடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2012 ஆம் வருடம் ஒன்றிய அரசு அரசாணை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் காவல் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும் போலீஸ் என்ற போர்டு  மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை ஆணையர்கள் அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்.ஐக்களுக்கு  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர்கள் அனைத்து காவல் ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |