Categories
மாநில செய்திகள்

வாகனங்களில் கட்சி தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் – ஐகோர்ட் அதிரடி!!

வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதாவது, வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்கவேண்டும்.. புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும். வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.. வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |