Categories
பல்சுவை

வாகனங்களில் நம்பர்பிளேட்…. வெவ்வேறு நிறங்களில் இருந்தால்…. என்ன அர்த்தம் தெரியுமா…??

இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு காருக்கும், ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கு நம்பர் பிளேட் ஏன் வேறு வேறு கலர்களில் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  வெள்ளை கலர் போர்டில் கருப்பு எழுத்துக்கள் இருந்தால், அது சொந்த வாகனம் என்பதை குறிக்கும். சொந்த லைசன்ஸ் வைத்து சொந்த பயணத்திற்கு ஒட்டிக் கொள்வது.

மஞ்சள் கலர் போர்டில் கருப்பு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தால் “கமர்சியல்” என்று அர்த்தம். அதாவது கார், ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும். அந்த வண்டி ஓட்டுநர்கள் கமர்சியல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

கருப்பு போர்டில் மஞ்சள் எழுத்து இருப்பதற்கு என்ன அர்த்தம் என்றால் “Rental Car Vechicle” என்று அர்த்தம். அதாவது ஒருத்தரிடம் இருந்து வாடகைக்கு ஒரு காரை எடுத்து அதை நம்முடைய சொந்தமாக ஓட்டிச் சென்றிட்டு பின்னர் திருப்பி அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இது பெரும்பாலும் கேரளாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஊதா கலர் போர்டில் வெள்ளை கலரில் எழுத்துக்கள் இருந்தால் வெளிநாட்டு தூதரகத்தின் உடைய கார் என்று அர்த்தகம்.

பச்சை கலர் போர்டில் வெள்ளை கலரில் எழுத்துக்கள் இருந்தால் அது எலக்ட்ரிக் வாகனம் என்று அர்த்தம்.

சிகப்பு கலர் போர்ட் நடுவில் இந்தியா சினம் பொறிக்கப்பட்டிருந்தால் இருந்தால் அது இந்திய பிரசிடெண்ட் வாகனம் என்று அர்த்தம்.

வாகனத்தில் அம்புக்குறி போட்டு எழுத்துகள் இருந்தால் அது இராணுவத்தினருடைய வாகனம் என்று அர்த்தம்.

Categories

Tech |