தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டால்கிராமப்புற மக்களுக்கு வாகனங்கள் மூலம் ஆவின் பால் வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். மேலும் பால் விலை குறைப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க ஆக்க பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.