சரக்கு வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர் காலணியில் ஓட்டுநரான மகாராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேனில் அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காரியாபட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது சரக்கு வேனின் கீழ் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாராஜா உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார்.
சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு வண்டியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வேனில் இருந்த அனைத்து அட்டை பெட்டிகளும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.