Categories
உலக செய்திகள்

வாகனத்தில் ஈடுபட்ட இளைஞரை…. 2 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் 4 வாகனங்களை திருடி தப்ப முயன்ற இளைஞரை 2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பிடித்தனர்.

அமெரிக்க நாட்டில் வடக்கு கரோலினா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று ஜீப் ஒன்று திருட்டுப் போன தகவலை அடுத்து சந்தேகத்தின் பேரில் சார்லட்-மெக்லன்பர்க் என்ற சாலையில் காவல்துறையினர் ஒருவரை துரத்த ஆரம்பித்தார்.

அப்பொழுது அங்கு அதிவேகமாக ஜீப்பில் சென்ற அந்த இளைஞன் சார்லட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கார்கள் போன்ற மூன்று வாகனங்களை திருடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையோர நடை பாதைகளிலும் லாவகமாக சென்று காவல்துறையினருக்கு சவால் விடுத்தார். மேலும் காவல்துறையினர் அந்த நபரை விடாமல் துரத்தி சென்ற நிலையில் கடைசியாக தெற்கு சார்லட்டில் கார் ஒன்றின் மீது மோதிய பின் அந்த இளைஞர் தானாகவே வந்து சரணடைந்தார்.

Categories

Tech |