Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற இளம்பெண்… திடீரென வந்த பேருந்து… இறுதியில் நடந்த சோகம்…!!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது மாநகரப் பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஐசிஎப் அருகே உள்ள சாலையில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்தில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இளம்பெண் மீது மோதியது. அதனால் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |