இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடேந்திரபுரத்தில் போபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். பிசியோதெரபி மருத்துவரான இவர் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபிநாத் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தேனியில் இருந்து திண்டுக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோபியின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் கோபி பலத்தகாயமடைந்த நிலையில் லாரியில் இருந்த டிரைவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் மற்றும் அருகே அமர்ந்த்திருந்த ரூபன் குமார், ஸ்டாலின் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக பிசியோதெரபி மருத்துவர் கோபிநாத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் லாரியில் இருந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்து செர்ன தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.