Categories
மாநில செய்திகள்

வாகனத்தை எடுக்க சென்ற பெண்… திடீரென வந்த வெள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

புதுச்சேரியில் வாகனத்தை எடுக்க சென்ற பெண் ஒருவர் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

புதுச்சேரி சண்முக புரத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிகுமார் மற்றும் ஹசீனா பேகம் (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சசிகுமார் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.அங்குள்ள ஓடை பகுதியில் அப்பகுதி மக்கள் அனைவரும்அங்கு உள்ள ஓடையில் உள்ள காலிஇடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவைப்பார்கள் .

இந்நிலையில் வழக்கம்போல ஹசீனா பேகம் தனது வாகனத்தை நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தி வைத்தார். அதன் பிறகு  நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம்  ஓடியது. கனமழை காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது .

இதையடுத்து நேற்று காலை ஹசீனா பேகம் தனது வாகனத்தை எடுக்க ஓடை அருகே வந்தார்.அப்பொழுது தனது வாகனம் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து தனது வாகனத்தை மீட்டெடுத்து பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காக சென்றார். அப்போது தண்ணீர் அதிகமாக வந்ததால் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி ஓடையில் விழுந்தார்.

இந்நிலையில் ஹசீனா பேகம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.தண்ணீரில் விழுந்த அசினா பெரும் அதிர்ச்சியில் காப்பாற்றுங்கள் என கத்தினார். அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில்  இருந்தவர்கள்  ஓடி வந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தார்கள் . மீட்க முடியாததால்  உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பிறகு போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு மிக விரைவில்  சென்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் . ஆனால் அவரை கண்டுபிடிக்க முயலவில்லை. இந்நிலையில் ஹசீனா பேகம் கதி என்னவென்று தெரியவில்லை. இதையடுத்து  அவரைதேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |