Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகனத்தோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி…. கிராம மக்களின் செயல்….!!

தண்ணீரில் அடுத்து செல்லப்பட்ட தொழிலாளியை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவனபள்ளி பகுதியில் சீனிவாசா ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து கனமழையில் ஏரிகள் நிரம்பி அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அன்றாட வேலைகளை செய்வதற்காக ஒருவரை ஒருவர் பிடித்தபடி சென்றுள்ளனர்.

அப்போது கூலித்தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தண்ணீர் அவரை அடித்து சென்றது. அங்கிருந்த ஒரு மர கிளையை பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்த ராஜேந்திரனை கிராம மக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |