Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு…. மெக்கானிக் கொலை…. கொடூர சம்பவம்….!!!!

பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட சண்டையில் 23 வயதேயான மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சிறிய பிரச்சனை வாக்குவாதமாக மாறி கொலையில் முடிந்துள்ளது. பைக்கை பார்கிங்கில் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான ரஹீம் என்பவருக்கும் பார்க்கிங்கில் பைக் நிறுத்துவது தொடர்பாக திங்கட்கிழமை இரவு சிறு பிரச்சனை ஏற்பட்டது. சிறு பிரச்சினை வாக்குவாதமாக மாறியது. அப்போது அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மீண்டும் பார்க்கருக்கும் ரஹீமிற்க்கும் தகராறு ஏற்பட்டது. சிந்தாதரிப்பேட்டை மீன் சந்தையில் மீன் வெட்டும் தொழில் செய்து வரக் கூடிய நூர் என்பவர்  புதுப்பேட்டையில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வரக் கூடிய பார்க்கருக்கு எதிராக ரஹீமுக்கு ஆதரவாக தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு உச்சக்கட்டத்தில் கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். ஆத்திரமடைந்த பாக்கரும் வீட்டிலிருந்து கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து ரஹீமை தாக்கினார். இந்த சம்பவத்தில் பாக்கரின் தந்தை வாஜித்துக்கும் காயம் ஏற்பட்டது. தந்தையும் மகனும் ரத்தம் சொட்ட சொட்ட ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி பாக்கர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். பின்னர் தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி திருவல்லிக்கேணி போலீசார் கொலை செய்த ரஹீமை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முகமது, நூர் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டனர்.

Categories

Tech |