டெல்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலான வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவர்களின் வாகன பதிவு சான்றிதழ்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்களின் அசௌகரியத்தை தவிப்பதற்காக அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன் செல்லுபடியாகும் சான்றிதழை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. சரியான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் அபராதம் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25க்கு பிறகு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் கிடைக்காது. அதே வேளையில் மாசு கட்டுப்பாடு சார்ந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.